Vallalar Song

கடவுளின் கருணையை நம் கண்முன்னே நிறுத்தும் வள்ளலார் பாடல். 20 நிமிடங்கள் இந்தப் பாடலைக் கேட்டாலே போதும் உங்கள் மனம் கடவுளை உணரும்.

 

கண்ணிற் கலந்தான் கருத்திற் கலந்தான்என்

எண்ணிற் கலந்தே இருக்கின்றான் – பண்ணிற்

கலந்தான்என் பாட்டிற் கலந்தான் உயிரில்

கலந்தான் கருணை கலந்து.

 

எல்லா நலமும் எனக்கே கொடுக்கின்றான்

எல்லாம் செயவல்லான் என்பெருமான் – எல்லாமாய்

நின்றான் பொதுவில் நிருத்தம் புரிகின்றான்

ஒன்றாகி நின்றான் உவந்து.

 

எண்ணுகின்றேன் எண்ணங்கள் எல்லாம் தருகின்றான்

பண்ணுகின்றேன் பண்ணுவித்துப் பாடுகின்றான் – உண்ணுகின்றேன்

தெள்ளமுதம் உள்ளந் தெளியத் தருகின்றான்

வள்ளல்நட ராயன் மகிழ்ந்து.

 

சித்தியெலாந் தந்தே திருவம் பலத்தாடும்

நித்தியனென் உள்ளே நிறைகின்றான் – சத்தியம்ஈ

தந்தோ உலகீர் அறியீரோ நீவிரெலாம்

சந்தோட மாய்இருமின் சார்ந்து.

 

அய்யாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே

எய்யேன் மகனேஎன் றெய்துகின்றான் – ஐயோஎன்

அப்பன் பெருங்கருணை யார்க்குண் டுலகத்தீர்

செப்பமுடன் போற்றுமினோ சேர்ந்து.

 

அப்பாஎன் றோர்கால் அழைக்கின்றேன் அப்பொழுதே

அப்பா மகனேஎன் றார்கின்றான் – துப்பார்

சடையான்சிற் றம்பலத்தான் தானேதான் ஆனான்

உடையான் உளத்தே உவந்து.

 

தானேவந் தென்உளத்தே சார்ந்து கலந்துகொண்டான்

தானே எனக்குத் தருகின்றான் – தானேநான்

ஆகப் புரிந்தானென்….

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *